எல்ஐசி-யில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!
எல்ஐசி-யில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!
நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது தகுதி 30 ஆகும். அதிகபட்ச வயது 79 ஆகும். குறைந்தபட்ச லாக்கிங் காலம் ஓராண்டு ஆகும். அதிகபட்ச லாக்கிங் காலம் 12 ஆண்டுகள் ஆகும்.
எல்ஐசி-யின் நியூ ஜீவன் சாந்தி திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பலனுள்ளதாக அமையும். அதிலும் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் நபர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
ஜீவன் சாந்தி திட்டமானது ஒருமுறை ப்ரீமியம் செலுத்தும் வகையிலான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒற்றை நபர் மற்றும் இருநபருக்கான வேறுபட்ட ஆனுய்டி பலன்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் மாதந்தோறும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். இந்தப் பலன் என்பது பாலிசி பர்சேஸ் விலையை ஆனுய்டி மதிப்பால் ஓராண்டு கணக்கில் பெருக்கி, அதனை 12ஆல் வகுத்து கிடைப்பதாக அமையும்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் பர்சேஸ் செய்ய வேண்டிய குறைந்தபட்ச ஆனுய்டி மதிப்பு ரூ.1,50,000 ஆகும். நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது தகுதி 30 ஆகும். அதிகபட்ச வயது 79 ஆகும். குறைந்தபட்ச லாக்கிங் காலம் ஓராண்டு ஆகும். அதிகபட்ச லாக்கிங் காலம் 12 ஆண்டுகள் ஆகும்.
பாலிசிதாரருக்கு கிடைக்க கூடிய குறைந்தபட்ச ஆனுய்டி தொகை ஆண்டு ஒன்றுக்கு ரூ.12,000 ஆகும். அதே சமயம், இதில் இறப்பு பலனும் கிடைகும். பர்சேஸிங் விலை மற்றும் இறப்புக்கான கூடுதல் பலன் ஆகியவை கூட்டல் செய்யப்பட்டு, அதில் செலுத்த வேண்டிய மொத்த ஆனுய்டி தொகை கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை இறப்பின்போது வழங்கப்படும். அதே சமயம், பர்சேஸிங் விலையை காட்டிலும் 105 மடங்கு உயர்வானதாக இருக்கும்.
மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி
எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் பெற்று ஓய்வுகாலத்தில் பொருளாதார கவலைகள் இன்றி, நிம்மதியாக வாழுவதற்கு திட்டமிடும் பட்சத்தில் தற்சமயம் நீங்கள் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதாவது, ஒற்றை ப்ரீமியமாக ரூ.1,05,16528 செலுத்த வேண்டியிருக்கும். இது மாறுபட்ட ஆனுய்டி காலம் என்பது அதிகபட்சம் 12 ஆண்டுகள் ஆகும். குறிப்பாக, 30 வயதில் இந்த முதலீட்டை செய்யும்பட்சத்தில் உங்களுக்கு ஓய்வு காலத்தில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் கிடைப்பது உறுதியாகும்.
அதாவது உங்கள் முதலீட்டுப் பணம் 12 ஆண்டுகளுக்கு லாக்கிங் ஆகியிருக்கும். அதற்குப் பிறகு உங்கள் வாழ்நாள் வரையிலும் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் உயிரிழக்கும் பட்சத்தில் உங்கள் வாரிசுதாரருக்கு நிதிப் பலன்கள் வழங்கப்படும். ஆனுய்டி பலன்களை மாதாந்திர அல்லது வருடாந்திர அல்லது அரையாண்டு அல்லது காலாண்டு தவணையில் பெற்றுக் கொள்ளலாம்.
Source: https://tamil.news18.com/news/business/lic-jeevan-shanti-how-much-premium-need-for-rs-1-lakh-pm-as-pension-876171.html
Comments
Post a Comment