LIC buying HDFC bank shares.. 9%

 இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் எச்டிஎஃப்சி வங்கி முதலீட்டாளர்கள் டிசம்பர் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு மோசமான மார்ஜின் அளவை பதிவு செய்த காரணத்தால் அதன் பங்கு மதிப்பு பெரிய அளவில் சரிந்து முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான இழப்பை எதிர்கொண்ட நிலையில் இன்று வரையில் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வர போராடி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் எச்டிஎஃப்சி வங்கி முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எச்டிஎஃப்சி வங்கியில் சுமார் 9.99% அளவிலான பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) விண்ணப்பித்திருந்த வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் மூலம் எல்ஐசி நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியில் தனது பங்கு இருப்பை 9.9 சதவீதம் வரையில் உயர்த்தி, இவ்வங்கியில் நிர்வாகக் குழுவில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கும் எல்ஐசி தகுதிப் பெற்றுள்ளது. ஆர்பிஐ-யின் விண்ணப்ப ஒப்புதல் மூலம் வாக்கு உரிமை குறித்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மூலம் மத்திய வங்கியின் ஒப்புதல் வந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, எல்ஐசி அடுத்த ஒரு ஆண்டிற்குள் எச்டிஎப்சி வங்கியின் 9.99% பங்குகளை வாங்க வேண்டும், அதே நேரத்தில் அதன் பங்குகள் 9.99% ஐ தாண்டக்கூடாது. டிசம்பர் 31 நிலவரப்படி எல்ஐசி, எச்டிஎப்சி வங்கியில் 5.19 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்தில் ரீடைல் சந்தையில் இருந்தோ அல்லது பிற முதலீட்டாளற்களிடம் இருந்தோ கூடுதலாக 4.8 சதவீத பங்குகளை வாங்கும். இதன் வாயிலாக ஹெச்டிஎப்சி பங்கு விலை உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்தச் செய்தி ஹெச்டிஎப்சி பங்குகளை 52 வார குறைவான அளவுக்குக் குறைந்த மார்ஜின் பிரச்சனைக்குத் தீர்வாக மாறியுள்ளது.

ஜனவரி 25 அன்று, எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் முந்தைய முடிவில் இருந்து 1.41 சதவீதம் குறைந்து, 1435.30 ரூபாயில் முடிவடைந்தது. மேலும் சென்செக்ஸ் குறியீடு ஜனவரி 25 ஆம் தேதி 0.51 சதவீதம் குறைந்து 70,700.67 புள்ளிகளில் முடிந்தது.


source: Good returns 
https://tamil.goodreturns.in/



Comments

Popular posts from this blog

Features of LIC Jeevan Lakshya Policy

Lic Dhan Varsha - Plan 866 Tamil

எல்ஐசி-யில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!