Editors Choice

3/recent/post-list

வேலையில் இருந்து ரிட்டயர்மென்ட் பெறுவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் செய்திடுங்கள்!

வேலையில் இருந்து ரிட்டயர்மென்ட் பெறுவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் செய்திடுங்கள்!




நமது ஓய்வு காலம் சுமூகமாக, நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இன்றைய நாள் தொடங்கி பல ஆண்டுகளுக்கு நாம் பணத்தை சேர்த்து வைத்தாக வேண்டும்.

சராசரியாக 20 முதல் 60 வயது வரையில் வேலை, வேலை என ஓடித் திரிந்து சோர்ந்து போகக் கூடிய நாம், ஓய்வுக்கு பிறகாவது மகிழ்ச்சியாக, பணிச்சுமை எதுவும் இன்றி நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புவோம். நம் வாழ்க்கையின் மிக முக்கிய காலகட்டமாக இந்த ஓய்வுகாலம் இருக்கும்.

நமது

ஓய்வு காலம் சுமூகமாக, நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இன்றைய நாள் தொடங்கி பல ஆண்டுகளுக்கு நாம் பணத்தை சேர்த்து வைத்தாக வேண்டும். நமக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டால் அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும் வேலை கொடுக்க தயக்கம் காட்டிவிடும்.

ஆக, வருமானம் இல்லாத அந்த வாழ்க்கைக்கு நம்மை நாம் இப்போதே தயார் செய்து கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக நாம் திட்டங்களை தொடங்குகிறோமோ, அந்த அளவுக்கு நமது ஓய்வுகாலத்தில் பலன்கள் கிடைக்கும்.

முன்பெல்லாம் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 மட்டுமே. ஆனால், மருத்துவ வசதிகள் பெருகியுள்ளதன் காரணமாக நமது வாழ்நாள் இப்போது 100 வயது வரை நீள்கிறது. ஆகவே, வாழ்க்கை முழுவதும் நம் தேவைகளை எதிர்கொள்வதற்கான பணம் தேவை.

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் :

நமக்கு வயது அதிகரிக்கப்பதற்கு ஏற்ப மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும் என்ற உண்மை நமக்கு தெரிந்திருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் பணவீக்கம் அதிகரித்து வருவதாலும், வட்டி விகிதங்கள் குறைந்து வருவதாலும் எதிர்காலத்தில் விலைவாசி ஏற்றத்துடனே காணப்படும். இதனால், இன்றைக்கு உங்களுக்கு தேவைப்படும் பணத்தைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதலாக ஓய்வு காலத்தில் தேவைப்படலாம்.

முன்கூட்டியே தொடங்கவும் :

நமது முதலீடு எந்த அளவுக்கு கூடுதல் அவகாசத்தை கொண்டுள்ளதோ, அந்த அளவுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். ஆக, நாம் இளம் வயதிலேயே சேமிக்கத் தொடங்கினால் தான் ஓய்வு காலத்தில் பெரும் தொகை நமக்கு கிடைக்கும்.

உதாரணத்திற்கு மாதந்தோறும் ரூ.10,000 என்ற அடிப்படையில் 30 வயதில் இருந்து சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால், நீங்கள் ஓய்வுபெறும் சமயத்தில் தோராயமாக 10 சதவீத கூட்டு வட்டியுடன் சேர்த்து ரூ.2.06 கோடி கிடைக்கும். அதுவே, நீங்கள் சேமிப்பை தொடங்க ஒரு 5 ஆண்டுகாலம் தாமதம் செய்தால், பின்னர் இதே தொகையை பெறுவதற்கு முதலீடு கூடுதலாக தேவைப்படும்.

சொந்த வீடு முக்கியம் :

அனைத்து மனிதர்களுக்குமே நமக்கென்று சொந்த வீடு வேண்டும் என்ற பெரும் கனவு இருக்கும். ஆனால், ஓய்வுகால முதிர்வுத் தொகையை எடுத்து வீடு வாங்கிக் கொள்ளலாம் என்று நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், பின்னர் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பிற்கு எதுவும் மிச்சம் இருக்காது. ஆகவே, இளம் வயதிலேயே சொந்த வீட்டுக் கனவை பூர்த்தி செய்திட வேண்டும்.

காப்பீடு அவசியம் :

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ செலவுகள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. இதனால், திடீர் மருத்துவ தேவைகளுக்கு நமது சேமிப்பு பணம் முழுவதையும் செலவிட வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆகவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

Source - News18.com

Post a Comment

0 Comments